Department of Tamil
தமிழ்த்துறை – தமிழ்ப்பாவை மன்றம்
கல்லூரி தமிழ்த்துறையின் சார்பில் தமிழ்ப்பயிலும் மாணவிகளுக்காக தமிழ்ப்பாவை மன்றம் இயங்கி வருகின்றது. இம்மன்றத்தின் கீழ் நாடக மன்றம் மற்றும் பேச்சு & விநாடி வினா மன்றம் செயல்படுகின்றன. மன்றத்தின் செயல்பாடுகளாக மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் வகையிலும் படைப்புத்திறனை வெளிக்கொணரும் வகையிலும் மாதந்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும் துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்து சொற்பொழிவாற்றச் செய்வதோடு மட்டுமின்றி அவர்களோடு மாணவிகளை உரையாடச்செய்து அறிவுத்திறன் மேம்படும் வகையிலும் இம்மன்றம் செயல்பட்டு வருகின்றது.
முத்தமிழ் விழா
தமிழ் மொழியின் சிறப்பாகிய முத்தமிழைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த்துறையின் சார்பில் அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவின் போது இயல் இசை நாடகம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்விழா தமிழ்ச்சான்றோர்களால் துவக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றது.
பாரதி விழா
பாரதியின் பிறந்தநாளன்று ஒவ்வொரு ஆண்டும் பாரதியை நினைவுகூறும் வகையில் பாரதிவிழா கொண்டாடப்படுகின்றது. அது சமயம் பாரதியின் கொள்கைகளை அடியொற்றி கவிதை கட்டுரை பாட்டு பேச்சு ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
திருவள்ளுவர் விழா
திருவள்ளுவரைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் விழா கொண்டாடப்படுகின்றது. அது சமயம் திருக்குறளை ஆழ்ந்து நோக்கும் வகையிலும் மாணவிகளின் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
சொற்களின் பெருக்கமே மொழியின் சிறப்பும் பெருமையும் ஆகும். சொற்களை பாதுகாக்கும் படைவீரர்களாக மாணவிகள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்த்துறையும் தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககமும் இணைந்து அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு புதிய சொற்களை உருவாக்கும் நெறிமுறைகளையும் சிறிய புதிய கலைச்சொற்களை அமைக்கும் வழிமுறைகளையும் விளக்கிக் கூறினர். சொற்குவைத் திட்டத்தில் புதிய சொற்களைக் கண்டறிந்து கூறிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கணித்தமிழ்ப்பேரவை
உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான தமிழ் மொழியின் சிறப்பினைக் கணினியில் அறியும் வகையில் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித் தமிழ்ப் பேரவையானது ,தமிழ்த்துறையில் இயங்கி வருகின்றது. இப்பேரவை மாணவிகள் தமிழ்மொழியை மட்டுமல்லாது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணினித்தமிழ் கற்கவும்உதவுகின்றது.
மாணவிகளின் திறன்களைக் வெளிக்கொணரும் வகையில்யுனி எழுத்துருவில்–தட்டச்சு செய்தல், சிறப்புரைகள், பயிலரங்கம், மின்சுட்டில் கட்டுரை வழங்குதல் மற்றும் கட்டற்ற மென்பொருளில் விழிப்புணர்வு முகாம் இப்பேரவையின்கீழ் நடத்தப்படுகின்றன.. மேலும் கல்வி நிறுவன அளவில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டு மாணவிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பல்கலைக்கழகத் தேர்வில் முதல் முப்பது இடங்கள் பெற்ற மாணவிகள் எண்ணிக்கை
ஆண்டு | எண்ணிக்கை |
2019-2020 | 10 |
2018-2019 | 12 |
2017-2018 | 17 |
2016-2017 | 08 |
2015-2016 | 29 |
2014-2015 | 15 |
2013-2014 | 09 |